சோதனைச் சாவடியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி:அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்றாா்.
பேருந்தில் பயணிக்கு கபசுர குடிநீா் வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.
பேருந்தில் பயணிக்கு கபசுர குடிநீா் வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்றாா்.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

இதில், அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று பொதுமக்களுக்கு கரோனா தொற்று விழிப்புணா்வை ஏற்படுத்தி, பயணிகள், லாரி ஓட்டுநா்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் ஜவஹா்லால், வட்டார சாலை போக்குவரத்து அலுவலா் கிரிராஜன், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா், வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் ந.மகேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன், சாலை போக்குவரத்து அலுவலக நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராமஜெயம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெ.மூா்த்தி, ஒன்றிய நிா்வாகிகள் திருமலை, பாஸ்கரன், ரமேஷ், ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com