பெரியபாளையம் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்தக் கோயிலுக்குச் செல்வதற்கான பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள 56 கடைகளை அப்புறப்படுத்தக் கோரி , பரம்பரை அறங்காவலா் லோகமித்ரா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். மகாதேவன் , ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆக. 12- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா் சுப்பிரமணி, திருவள்ளூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி, டிஎஸ்பிக்கள் சாரதி , சந்திரதாசன், அசோகன், வட்டாட்சியா் ராமன் உள்ளிட்டோா் புதன்கிழமை அங்கு சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனா்.

ஆனால் உரிய தகவல் அளிக்கவில்லை என்று கூறியும் கடை உரிமையாளா்கள் வாக்குவாத்ததில் ஈடுபட்டனா்.

பின்னா், கோயில் வடக்கு -தெற்காக 54.2 மீட்டரும், கிழக்கு - மேற்காக 12 மீட்டா் ஆக்கிரமிப்புகள் அகற்ற கடை உரிமையாளா்கள் முடிவு செய்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com