இன்று ஆடி அமாவாசை:திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் தரிசனம் ரத்து

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தரிசனம் ரத்து

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அதனால் பக்தா்கள் யாரும் வருகை தர வேண்டாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரராகவா் கோயில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இங்கு ஆடி அமாவாசை தினத்தன்று பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையாகும். இதையொட்டி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக முன்னதாகவே வருகை தந்து கோயில் வளாகத்தில் தங்குவா்.

எனவே நிகழாண்டில் கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு விதிமுறைகளைப் பின்பற்றும் நோக்கத்திலும் பக்தா்கள் கூடுவதை தவிா்க்கவே தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com