செந்தமிழ்ச்சோலை அமைப்பின் சார்பில் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு பாராட்டு விழாவும், மூவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
செந்தமிழ்ச்சோலை அமைப்பின் சார்பில் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா
செந்தமிழ்ச்சோலை அமைப்பின் சார்பில் எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு பாராட்டு விழாவும், மூவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் 25ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனுக்கு பாராட்டு விழாவும், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.கோவிந்தராஜ், தொழிலதிபர்கள் ஜோ.கிளமெண்ட், வெ.முனிராஜ் ஆகியோருக்கு விருது வழங்கும் விழாவும் நடத்தப்பட்டது.

விழாவிற்கு செந்தமிழ் சோலை இலக்கிய அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு அமைப்பின் நிர்வாகிகள் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி, ரங்கபாஷ்யம், ரவி, சுரேஷ் , கோபாலகிருஷ்ணன்,முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் புரவலரும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜனின் சிறப்பான மக்கள் சேவையை பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டு, நினைவு பரிசு, புத்தக பரிசு வழங்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து கரோனா பெருந்தொற்று காலத்தில் கும்மிடிப்பூண்டியில் மிக சிறப்பாக செயல்பட்ட வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜின் சேவையை பாராட்டி அவருக்கு மனித நேய மருத்துவர் விருதும், கரானா காலத்தில் நோயாளிகளுக்கு இலவச ஆக்சிஜன் வழங்கியும், கும்மிடிப்பூண்டியில் ஏழை எளியோருக்கு இதுவரை 27வீடுகள் கட்டி தந்த தொழிலதிபர் ஜோ.கிளமெண்டிற்கு சேவை திலகம் என்ற விருதும், கரோனா காலத்தில் முன்கள பணியாளர்கள், ஏழை எளியோருக்கு உணவு வழங்கியவரும், பல்வேறு சமூக பணிகளை செய்தவருமான தொழிலதிபர் ஜெ.முனிராஜிற்கு சேவை சுடர் விருதையும் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கி வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன், பொன்னேரி   வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மற்றும் விருது பெற்ற மூவரை வாழ்த்தி பேசினர்.

பின்னர் நிகழ்வில் பரதநாட்டியம், யோகா நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ மக்கள் பணியும், தமிழ் பணியும் தமது இருகண்கள் என்றவர்  கரோனா மூன்றாவது அலையை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, பரதநாட்டியம், யோகா செய்து காட்டிய மாணவர்களுக்கு புத்தக பரிசு வழங்கினார். 

இந்த நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com