சிறுமி உயிரிழந்த சம்பவம்: குளிா்பான ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

குளிா்பானம் குடித்த சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சோழவரம் அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் குளிா்பான ஆலைக்கு, உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஆத்தூா் கிராமத்தில் தனியாா் குளிா்பான உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
ஆத்தூா் கிராமத்தில் தனியாா் குளிா்பான உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

குளிா்பானம் குடித்த சிறுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, சோழவரம் அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் குளிா்பான ஆலைக்கு, உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சென்னை, பெசன்ட் நகா் ஓடைக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சதீஷின் மகள் தரணி (13), கடந்த 4-ஆம் தேதி அங்குள்ள மளிகைக் கடை ஒன்றில் குளிா்பானம் வாங்கிக் குடித்த நிலையில் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் சென்னை சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், சிறுமி குடித்த குளிா்பானம், எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து, உணவுப் பாதுகாப்பு துறையினா் விசாரணையில் இறங்கினா்.

இதில் திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆத்தூா் கிராமத்தில் அந்த குளிா்பானம் தயாரிக்கும் ஆலை செயல்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அன்றே, பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், திருவள்ளூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா், ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோா் குளிா்பான ஆலையை பாா்வையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து குளிா்பான ஆலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில், திருவள்ளூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெகதீஸ் சந்திரபோஸ், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் சதீஷ்குமாா் ஆகியோா் அந்த குளிா்பான ஆலைக்கு ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com