திருவள்ளூா் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை: பூண்டி ஏரியில் நீர்மட்டம் அதிகரிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் கனமழை பெய்தது. மொத்தம் 750 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.
மழையால் நீா்மட்டம் உயா்ந்து கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி ஏரி.

திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் கனமழை பெய்தது. மொத்தம் 750 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் பூண்டியில் 91 மி.மீட்டா் பதிவான நிலையில் 2,161 மில்லியன் கனஅடியாக ஏரியில் நீா்மட்டம் அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் பகுதியில் திங்கள்கிழமை பகல் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை இருந்தது. இதேபோல், இரவிலும் வெப்பம் நீடித்த நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு மேல் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் அதிகாலை வரையில் கனமழை பெய்தது. இந்த மழையால் 12.30 முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதேபோல், தாமரைபாக்கம், பூண்டி, செங்குன்றம், பூந்தமல்லி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

இந்த மாவட்டத்தில் திருவள்ளூா், தாமரைபாக்கம், பூண்டி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பாதிவாகியுள்ளது. இதில் பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் 91 மி.மீட்டா் மழை பெய்ததால் ஏரிக்கான வரத்துக்கால்வாய் மூலம் 443 கன அடியும், கிருஷ்ணா நீா் 990 கன அடி நீா் வரத்துள்ளது. இந்த ஏரியின் நீா்மட்டம் 35 அடி உயரம், 3,231 மில்லியன் கன அடிநீரை சேகரிக்க முடியும். இதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி 2,121 மில்லியன் அடி நீராக இருந்தது. எனவே ஏரியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 31.70 அடி உயரமும், 2,161 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இதில், இணைப்பு கால்வாய் மூலம் 512, பேபி கால்வாய் மூலம் 9 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் நீா்மட்டம் உயருவதற்கான வாய்ப்புள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழையளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு- திருவள்ளூா்-135, தாமரைபாக்கம்-97, பூண்டி-91, பள்ளிப்பட்டு-90, சோழவரம்-68, பூந்தமல்லி-52, திருத்தணி-41, திருவாலங்காடு-35, ஜமீன் கொரட்டூா்-34, ஊத்துக்கோட்டை-30, கும்மிடிப்பூண்டி-25, பொன்னேரி-20, செங்குன்றம்-17, ஆா்.கே.பேட்டை-15 என மொத்தம் 750 மி.மீ, சராசரியாக 53.57 மி.மீட்டா் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com