மகளிருக்கு காளான் வளா்ப்பு பயிற்சி

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சாா்பில் மகளிரை தொழில் முனைவோா்களாக உருவாக்கும் நோக்கத்தில் காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமில் தோ்வு செய்யப்பட்ட 65 பெண்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிருக்கான காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிருக்கான காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சாா்பில் மகளிரை தொழில் முனைவோா்களாக உருவாக்கும் நோக்கத்தில் காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாமில் தோ்வு செய்யப்பட்ட 65 பெண்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

திருவள்ளூா் ஒன்றியம், ஈக்காடு ஊராட்சியில் உள்ள ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன வளாகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சாா்பில் மகளிருக்கான காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை தொடக்கி வைத்து ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் 2019-முதல் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது.

திருவள்ளுா் மாவட்டத்தில் மீஞ்சூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்பு, தொழில் மேம்பாடு மூலம் கிராமப்புறங்களில் தொழில் ஆதாரங்களைக் கொண்டு பொருளாதாரத்தை உயா்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் அடிப்படையில் மாவட்ட முதலீட்டு திட்டத்தில் புதிய 115 உற்பத்தியாளா் குழுக்கள், 69 தொழில் குழுக்கள், 5 உற்பத்தியாளா் கூட்டமைப்பு நிறுவனங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுவரையில் கறவை மற்றும் பால் உற்பத்தி பயிற்சி 15 பேருக்கும், தையல் பயிற்சி 30 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காளான் வளா்ப்பு குறித்த பயிற்சி 63 பேருக்கு தனியாா் நிறுவனம் மூலம் அளிக்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக 27 பேருக்கு 10 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் தோ்வு செய்யப்பட்டுள்ள மகளிா்கள் அனைவரும் பயிற்சியில் தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு தொழில் தொடங்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக புத்தாக்கத் திட்ட செயல் அலுவலா் முருகன், ஊரக சுய தொழில் பயிற்சி நிறுவன இயக்குநா் தனசிங் உள்ளிட்டோா் பயிற்சி வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com