வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 03rd December 2021 07:30 AM | Last Updated : 03rd December 2021 07:30 AM | அ+அ அ- |

வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக வியாழக்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் உள்ள முதல் அலகில் இருக்கும் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சரி செய்யும் பணியில் மின் வாரியத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.