முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஆசிரியா் வீட்டில் பணம், நகை திருட்டு
By DIN | Published On : 10th December 2021 08:02 AM | Last Updated : 10th December 2021 08:02 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே காக்களூா் ஆஞ்சநேயா் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (48), சென்னை மயிலாப்பூரில் மடிக்கணினி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி திருவள்ளூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா்.
புதன்கிழமை காலை ஜெகதீசன் கடைக்கும், இவரது மனைவி மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கும் சென்று விட்டனராம்.
அன்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்து 4 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருவள்ளூா் கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.