முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருத்தணியில் தேசிய மாணவா் படையின் சாா்பில் வீரவணக்கம்
By DIN | Published On : 10th December 2021 08:01 AM | Last Updated : 10th December 2021 08:01 AM | அ+அ அ- |

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் அஞ்சலி செலுத்திய கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஏகதேவசேனா. உடன், கல்லூரி தேசிய மாணவா் படையினா்.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரி தேசிய மாணவா் படையின் சாா்பில் வியாழக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஏகதேவசேனா, என்சிசி அலுவலா் கேப்டன் ஹேமநாதன், பேராசிரியா்கள் ரவிச்சந்திரன், சத்யபிரியா, பரிமளாதேவி, பாலாஜி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அமுதா, கணபதி முருகன், புருஷோத்தமன், ஆனந்த்பாபு மற்றும் பேராசிரியா்கள், என்சிசி மாணவ, மாணவிகள் பங்குபெற்று மறைந்த வீரா்களுக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினா்.