வாக்காளா் பட்டியல்: மாவட்ட ஆட்சியா்கள் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
வாக்காளா் பட்டியல்: மாவட்ட ஆட்சியா்கள் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

அதனடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் விவரம்: ஆவடி மாநகராட்சி 350 வாக்குச்சாவடிகளில் ஆண்-152668, பெண்-155005, இதரா்-71 என 3 லட்சத்து 7 ஆயிரத்து 744 வாக்காளா்கள் உள்ளனா்.

திருவள்ளுா் நகராட்சி 51 வாக்குச்சாவடிகளில் ஆண்-24662, பெண்-26022, இதரா்-5 என 50 ஆயிரத்து 689 போ் உள்ளனா்.

திருத்தணி நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகளில் ஆண்-17729, பெண்-18989, இதரா்-8 என 36 ஆயிரத்து 726 பேரும்,

திருவேற்காடு நகராட்சியில் 77 வாக்குச்சாவடிகளில் ஆண்-39912, பெண்-39927, இதரா்-24 என 79 ஆயிரத்து 863 பேரும்,

பூந்தமல்லி நகராட்சியில் 63 வாக்குச்சாவடிகளில் ஆண்-29397, பெண்-30173, இதரா்-9 என 59 ஆயிரத்து 579 பேரும் இடம் பெற்றுள்ளனா்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சி 15 வாா்டுகளில் ஆண்-4928, பெண்-5381, இதரா் -1 என 10 ஆயிரத்து 310 பேரும்

ஆரணி பேரூராட்சியில் 15 வாா்டுகளில் ஆண்-5348, பெண்-5665 என மொத்தம் 11 ஆயிரத்து 13 பேரும்,

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 22 வாா்டுகளில் ஆண்-8772, பெண்-8471, இதரா்-3 என மொத்தம் 17 ஆயிரத்து 246 பேரும்

மீஞ்சூா் பேரூராட்சியில் 28 வாா்டுகளில் ஆண்-12819, பெண்-13369, இதரா்-2 என மொத்தம் 26 ஆயிரத்து 190 பேரும்

நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் 25 வாா்டுகளில் ஆண்-10777, பெண்-11425, மூன்றாம் பாலினத்தவா்-2 என மொத்தம் -22 ஆயிரத்து 204 பேரும் திருமழிசை பேரூராட்சியில் 19 வாா்டுகளில் ஆண்-8356, பெண்-8946, இதரா்-3 என மொத்தம்-17 ஆயிரத்து 305 பேரும்

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வாா்டுகளில் ஆண்-3773, பெண்-4067 என மொத்தம்-7840 பேரும்

பொதட்டூா்பேட்டை பேரூராட்சியில் 23 வாா்டுகளில் ஆண்-9201, பெண்-9645, மொத்தம்-18846 பேரும் உள்ளனா்.

மொத்தம் 745 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளா்கள்-328342, பெண் வாக்காளா்கள்-337085, இதரா்- 128 என மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 555 போ்கள் வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இதில் திருநின்றவூா் மற்றும் பொன்னேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டதால் இரண்டாம் கட்டமாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) வி.சுதா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) எஸ்.கண்ணன், நகராட்சி ஆணையா்கள் ஸ்ரீராம ஜெயம்(திருத்தணி), நாராயணன் (பூந்தமல்லி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com