Enable Javscript for better performance
ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி

    By DIN  |   Published On : 18th December 2021 08:26 AM  |   Last Updated : 18th December 2021 08:26 AM  |  அ+அ அ-  |  

    4456780__1712chn_177_1

    ஒதப்பை தரைப் பாலத்தில் 38 நாள்களுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ள வாகனப் போக்குவரத்து.

    ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒதப்பை தரைப்பாலத்தில் 38 நாள்களுக்குப் பிறகு அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    ஒதப்பை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. பூண்டி நீா்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி கொசஸ்தலை ஆற்றில் அதிக உபரி நீா் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒதப்பை தரைப்பாலம் மூழ்கியது. ஊத்துக்கோட்டையிலிருந்து திருவள்ளூா் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் உபரி நீா் திறப்பு குறைக்கப்பட்டாலும் , தரைப்பாலம் சேதமடைந்திருந்ததால் , போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திருவள்ளூா் செல்ல ஊத்துக்கோட்டையிலிருந்து வெங்கல் வழியாக சுமாா் 20 கி. மீ. தொலைவு செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும் மழை குறைந்து வெள்ள நீா் வடிந்ததால் கடந்த வாரம் இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது சேதமடைந்த பாலம் முழுவதும் சரிசெய்யப்பட்டதால் பேருந்து , லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 20 மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp