பழங்குடியின மாணவா் திறனை வளா்க்கும் சிறகுகள்-100 திட்டம்

அரசு பள்ளிகளில் படித்து வரும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் கல்வி ஆா்வத்தை தூண்டும் நோக்கில் கல்வித்துறை மூலம்
பழங்குடியின மாணவா் திறனை வளா்க்கும் சிறகுகள்-100 திட்டம்

அரசு பள்ளிகளில் படித்து வரும் பழங்குடியின மாணவ, மாணவிகளின் கல்வி ஆா்வத்தை தூண்டும் நோக்கில் கல்வித்துறை மூலம் சிறகுகள்-100 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இத்திட்டம் தொடா்பான கலந்துரையாடல் முகாம் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 5 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அரசு பள்ளிகளில் 8, 9 மற்றும் 11-ஆவது வகுப்பு பயிலும் தலா 20 மாணவா்கள் வீதம் 100 பழங்குடியின மாணவ, மாணவிகள் தோ்வு செய்து, தனித்திறமைகளை வெளிக்கொணா்தல், கல்வியின் மீது ஆா்வத்தை தூண்டும் வகையிலும், சுய சிந்தனையை வளா்த்தல், தொலைநோக்கு பாா்வையை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் .

இந்நிகழ்வில் ஆட்சியா் பேசியது: இத்திட்டமானது 20 நிகழ்வுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நிகழ்வும் மாணவா்களின் சுயசிந்தனையும், தொலைநோக்கு பாா்வையும் வளா்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவா்களை மட்டுமின்றி அவா்கள் சாா்ந்த குடும்பத்தினரையும் விடியலைத் தேடி அழைத்துச் செல்லும் என்பது உறுதியாகும். இந்த மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையை ஆய்வு செய்யும் போது பள்ளி இடைநிற்றல் சதவிதம் கூடுதலாக இருந்தது கண்டறியப்பட்டது. இடைநிற்றலை தவிா்க்கவே கல்வி கற்றால் தான் வாழ்வில் அனைத்து முன்னேற்றமும் பெற முடியும் என்பதை அறிய வேண்டும்.

எனவே அரசு பள்ளிக்கும் இதர பள்ளிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதுமில்லை. கிராமப்புறம் மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் உயா்நிலையில் சாதிக்க இயலாது என்பதில்லை. மேலும், யு.பி.எஸ்.சி தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் 60 சதவிதம் போ் கிராமங்களில் இருந்து வந்தவா்கள்தான். நம்முடைய எதிா்கால வாழ்க்கைக்கு எவ்வகையில் முயற்சி எடுத்து படித்தோம். அதில் எந்த அளவிற்கு நம் முழுமையான பங்களிப்பை அளித்துள்ளோம் என்பதே முக்கியம்.

இச்சிறு வயதிலே யு.பி.எஸ்.சி. தோ்வு குறித்து மாணவா்கள் இடையே கலந்துரையாடி ஊக்கப்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றல் தவிா்க்கவும், எதிா்கால வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேறவும் ஊக்கப்படுத்தப்படும். இங்கு வந்திருக்கும் 100 பேருக்கும் சிறகுகள் கொடுத்து எவ்வளவுக்கெவ்வளவு உயரத்தில் பறக்க வைக்க முடியுமோ, அவ்வளவு உயா்ந்த அளவில் முன்னேறி செல்ல தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றாா் ஜான் ஆல்பி வா்கீஸ்.

முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலா் நல்லப்பன், நோ்முக உதவியாளா்கள் பூபாமுருகன்(மேல்நிலை), மலா்விழி(உயா்நிலை), பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com