எல்லாபுரம் ஒன்றியக்குழு கூட்டம்
By DIN | Published On : 25th December 2021 06:33 AM | Last Updated : 25th December 2021 06:33 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியக் குழுக் கூட்டம், பெரியபாளையத்தில் அமைந்துள்ள வட்டார வளா்ச்சி அலுவலக மன்ற அரங்கத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ரமேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்). வட்டார வளா்ச்சி அலுவலா் இராஜேஸ்வரி , துணைத் தலைவா் சுரேஷ் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் கிரிபாபு மன்ற பொருள்களை வாசித்தாா்.
கூட்டத்தில் கவுன்சிலா் திருமலை சிவசங்கா் பேசுகையில், தாமரைப்பாக்கத்தில் பழைமைவாய்ந்த பள்ளியை சீரமைத்து, புதிய கட்டடம் அமைக்க வேண்டும், கூட்டுச்சாலையில் பொது சுகாதார கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.