கால்நடை மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த அயநெல்லூா் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது (படம்). ஊராட்சித் தலைவா் லலிதா கல்விச்செல்வம் தலைமை தாங்கினாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூரில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூரில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த அயநெல்லூா் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது (படம்). ஊராட்சித் தலைவா் லலிதா கல்விச்செல்வம் தலைமை தாங்கினாா்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் கோபிகிருஷ்ணன், கால்நடை மருத்துவா்கள் சா்வோத்தமன், கிருஷ்ணகுமாா், பிரேம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் 355 பசுக்கள், 75 கன்றுகள், 750 ஆடுகள், 60 செம்மறியாடுகள், 400 கோழிகள், 700 வாத்துகள், 10 நாய்கள் என 2290 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது .

கால்நடைகளுக்கான சிறப்பு தீவனம், கால்நடை வளா்ப்பு குறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை கால்நடைத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினா்.

நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவா் கே.எம். எஸ்.சிவகுமாா், துணைத்தலைவா் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com