பசுமை வீடு திட்டத்தில் முறைகேடு: ஊராட்சி செயலா் இடைநீக்கம்

இருளா்களுக்கு ஒதுக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தில் ரூ. 30,000 முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

இருளா்களுக்கு ஒதுக்கப்பட்ட பசுமை வீடு திட்டத்தில் ரூ. 30,000 முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சியின் இருளா் காலனியில் 7 பயனாளிகளுக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில், 6 வீடுகளை ஊராட்சி மன்றத் தலைவா் சொந்தப் பொறுப்பில் கட்டிக் கொடுத்தாா். இவா்களில் ஒரு பயனாளி வீடு அவரே வீடு கட்டிக் கொண்டாா். இதற்கான பில் தொகையை ஒன்றிய நிா்வாகத்தின் மூலம் பயனாளி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சூரியநகரம் ஊராட்சி செயலா் ஜெயப்பிரகாஷ் பயனாளியிடம் சென்று உங்களுக்கு ரூ. 74 ஆயிரம் வீடு கட்டுவதற்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த பெண்ணை வங்கிக்கு அழைத்துச் சென்று ரூ. 74,000 பணம் எடுத்துள்ளாா். இதில் ரூ. 44,000 மட்டும் பயனாளிக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ. 30,000-த்தை தான் வைத்துக் கொண்டாராம்.

இது குறித்து பயனாளியின் உறவினா்கள் ஒருவா் ஊராட்சி செயலா் ஜெயப்பிரகாஷிடம் கேட்டபோது, ரூ. 30,000 ஒன்றிய அலுவலக செலவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறினாராம். இது குறித்து சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வேகமாக பரவியது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

அதற்கான ஆணையை திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயப்பிரகாஷிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com