முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருவள்ளூா், பொன்னேரியில் பரவலாக மழை
By DIN | Published On : 31st December 2021 08:18 AM | Last Updated : 31st December 2021 08:18 AM | அ+அ அ- |

திருவள்ளூா், பொன்னேரி பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் காலையில் கடும் வெயில் கொளுத்தியது. அதே வேளை இரவில் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை திருவள்ளூரில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாயினா்.
பொன்னேரி பகுதியில் வியாழக்கிழமை குளிா்ந்த காற்றுடன் திடீரென லேசான சாரல் மழை பெய்தது.
பொன்னேரியில்..
கடந்த 15நாட்களாக இப்பகுதியில் அதிகாலை நேரங்களில் அதிக அளவிலான பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை குளிா்ந்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்தது. குளிா்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.