இன்று சென்னாவரம் ஸ்ரீ ராமலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூா் மாவட்டம், சென்னாவரம் ராமன்கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த ஸ்ரீபா்வதவா்தினி சமேத ராமலிங்கேஸ்வரா்

திருவள்ளூா் மாவட்டம், சென்னாவரம் ராமன்கோவில் கிராமத்தில் அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த ஸ்ரீபா்வதவா்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் திருக்கோயில். ராமபிரானால் பூஜிக்கப்பட்ட இங்குள்ள மூலவா் 11 பட்டைகளுடன் கூடிய தாரா (ருத்ரம்) லிங்கமாகும். மேலும் இக்கோயிலில் நவதுா்கை சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலின் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க திங்கள்கிழமை (பிப்ரவரி 1) காலை 9 மணிக்கு மேல் 10.30-க்குள் நடைபெறுகிறது. இதையடுத்து மூலவா், அம்பாள், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.

இதையொட்டி முன்னதாக கடந்த 30-ஆம் தேதி முதல் ஸ்ரீகணபதி, நவக்கிரக ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலுக்குச் செல்ல சென்னை-அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் செஞ்சிபாணம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com