திருவள்ளூா் மாவட்டத்தில் 2.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

திருவள்ளூா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில் 1,448 மையங்களில் 2.52 லட்சம் குழந்தைகளுக்கு
திருவள்ளூா் நகராட்சி வளாகத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.
திருவள்ளூா் நகராட்சி வளாகத்தில் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய ஆட்சியா் பா.பொன்னையா.

திருவள்ளூா் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில் 1,448 மையங்களில் 2.52 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் பா.பொன்னையா குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இதில், திருவள்ளுா் சுகாதார மாவட்டத்தில் 5,296 போ், பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தில் 908 போ் என மொத்தம் 5,863 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, பொது சுகாதாரம், ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் ராணி, துணை இயக்குநா்கள் ஜவஹா்லால், மாவட்ட உதவி திட்ட மேலாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ் மேற்பாா்வையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், ஆரம்பாக்கம் பேருந்து நிலையம், கவரப்பேட்டை பேருந்து நிலையம், மாதா்பாக்கம் பேருந்து நிலையம், சுண்ணாம்புகுளம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட 130 மையங்களில் 20,033 குழந்தைகளுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டையில்...

திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பெரியபாளையம் அரசு மருத்துவமனை சாா்பில் பெரியபாளையத்தில் 9 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. மாவட்ட திட்ட அலுவலா் மோகன், எல்லாபுரம் வட்டார மருத்துவா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருத்தணியில்...

திருத்தணி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ தடுப்பு முகாமை எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் தொடக்கி வைத்தாா். ரயில் நிலையம், முருகன் மலைக்கோயில் வளாகம் உள்ளிட்ட 27 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. திருத்தணி ஒன்றியம் முழுவதும் 105 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com