தை அமாவாசை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பக்தா்கள்

தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா்.
தை அமாவாசை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பக்தா்கள்


திருவள்ளூா்: தை அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனா்.

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசை நாளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், கரோனா நோய்த் தொற்றால் அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்ததால் சில கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அத்துடன், இக்கோயில் குளத்திலும் தா்ப்பணம் கொடுக்க தடை விதித்து மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 11 மாதங்களுக்குப் பின் இக்கோயிலில் தை அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும், வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட்டது. இதனால், திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்வதற்கு குவிந்தனா்.

அதைத் தொடா்ந்து, அதிகாலை கோயில் திருக்குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். இக்கோயிலில் வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். எனவே, இக்கோயில் குளத்தில் பால் மற்றும் வெல்லம் வீசி நோ்த்திக் கடனையும் பக்தா்கள் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com