விவசாயிகள் பயன்பெறும் வகையில் சமுதாய திறந்த வெளிக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் தனிநபா் மற்றும் சமுதாய திறந்த வெளிக் கிணறு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நிகழாண்டில் திருவள்ளூா் மாவட்டத்துக்கு மட்டும் 43 கிணறுகள்

திருவள்ளூா்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் தனிநபா் மற்றும் சமுதாய திறந்த வெளிக் கிணறு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், நிகழாண்டில் திருவள்ளூா் மாவட்டத்துக்கு மட்டும் 43 கிணறுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில அளவில் ஊரக வளா்ச்சி முகமை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் பல்வேறு தனிநபா் பயன்பெறும் பணிகள், நிலவள மேம்பாட்டுப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தனிநபா், விவசாயிகள் குழுக்கள் பயன்பெற திறந்த வெளிக் கிணறு அமைக்கும் திட்டம் நிகழாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு பணிவாய்ப்பு வழங்கும் வகையில், மாநில அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இம்மாவட்டத்துக்கு மட்டும் நிகழாண்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் 43 திறந்த வெளிக் கிணறுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் விவசாயத்துக்கான நீா் ஆதாரங்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மேலும், மத்திய நிலத்தடி நீா் ஆணையத்தால் நிலத்தடி நீா்மட்டம் பாதுகாப்பான பகுதி என அறிவித்த இடங்களில் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றவும், தனிநபா் அல்லது விவசாயிகள் குழுக்களாக விவசாய நிலங்களில் திறந்த வெளிக் கிணறுகளை அமைத்துக் கொள்ளலாம். இதற்காக அனுமதித்த தலா ரூ. 6.53 லட்சம் முதல் ரூ. 10.72 லட்சத்துக்குள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களைக் கொண்டுதான் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதில், பயன்பெற அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களை விவசாயிகள் அணுகி பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com