திருவள்ளூரில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

மகளிர்கள் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயை தேவைக்கு செலவு செய்து, வருங்காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து வைப்பது அவசியம் என காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.
திருவள்ளூரில் தனியார் அரங்கத்தில் நடைபெற்ற சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி.
திருவள்ளூரில் தனியார் அரங்கத்தில் நடைபெற்ற சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி.

மகளிர்கள் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயை தேவைக்கு செலவு செய்து, வருங்காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து வைப்பது அவசியம் என காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.

திருவள்ளூரில் தனியார் அரங்கத்தில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் பெல்ஸ்டார் நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் பெல்ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமை வகித்து பேசியதாவது, தொழில் முனைவோராக செயல்படும் மகளிர்கள் தங்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். 

மேலும், தொழில் முனைவோராக செயல்பட விரும்புவோர் எந்த தொழில் என்பதை தேர்வு செய்து கட்டாயம் தனித்திறனை வளர்த்துக் கொள்வதும் அவசியம். இதில் யாரை நம்பியும் தொழிலில் ஈடுபடாமல், சொந்த நம்பிக்கையில் அச்சமின்றி ஈடுபட வேண்டும். தொழில் முனைவோர் என்ற தைரியத்தில், பெண் சுதந்திரம் என்ற பேரிலும் குடும்பத்தில் உள்ள முதியோர்களை அலட்சியமாக பார்க்கவே கூடாது. அதேபோல், தொழில் சம்பந்தமான அனுபவங்களை பிறரிடம் கற்று அறிந்து கொண்டே இருக்க வேண்டும். தொழிலில் எக்காரணம் கொண்டும் ஒரே நிலையில் நிற்காமல், காலத்திற்கேற்ப புதிய பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்வது மூலம் மட்டுமே வளர்ச்சியடைந்த வெற்றியாளராக இருக்க முடியும்.

அதேபோல், தொழில் மூலம் கிடைக்கும் வருவாயை தேவைக்கு ஏற்ப செலவு செய்து, வருங்காலத்திற்கு சேமிக்கவும் வேண்டும் என மகளிர்களுக்கு அவர் அறிவுரை வழங்கி பேசினார். அதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தையல், அழகுக்கலை தொழில், கால்நடை வளர்ப்பு, சிறு குறு வணிகம் நடத்தி வரும் 10 மகளிர்களுக்கு பெண் தொழில் முனைவோருக்கான விருது, சிறப்புத் தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து விருது பெற்ற 10 பேருக்கும் அவர்களுடைய புகைப்படம் இடம் பெற்ற தபால் அஞ்சல் பதிப்பையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகளிர் குழுக்களைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீநிவாஸ், மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, திருவூர் வேளாண் அறிவியல் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தி, மாவட்ட தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், தாட்கோ திட்ட மேலாளர் இந்திரா, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் அருண்குமார், ஜோசப் மற்றும் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com