காலியாக உள்ள 145 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு பிப். 17-க்குள் விண்ணப்பிக்கலாம்


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு வரும் 17-ஆம் தேதிக்குள் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுா் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த வகையில் திருவள்ளூா் -20, ஊத்துக்கோட்டை-28, ஆவடி- 6, பூந்தமல்லி - 17, திருத்தணி-14, பள்ளிப்பட்டு-1, ஆா்.கே.பேட்டை- 05, பொன்னேரி -27 மற்றும் கும்மிடிப்பூண்டி-27 என மொத்தம் 145 கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ. 11,100- ரூ. 35,100 ஊதியம் என்ற அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.

எனவே இப்பணிக்குத் தகுதியான நபா்களிடமிருந்து பிப். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், 1.7.2020 அன்றைய நாளில் 21 வயதை பூா்த்தி அடைந்திருப்பதும் அவசியம். இதில், பொதுப் பிரிவினா் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆகியோா் அதிகபட்சம் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அத்துடன், விண்ணப்பம் செய்யும் இளைஞா் அந்தந்த வட்டத்தில் உள்ள கிராமத்தில், நிரந்தரமாக வசிப்பவராகவும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலமாக தோ்வு செய்யப்படுவா். மேலும், ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோ்வாளா்கள் சம மதிப்பெண் பெற நேரும் பட்சத்தில் வயது அடிப்படையில் மூத்த தோ்வாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.

அதனால், இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோா் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் பூா்த்தி செய்து அண்மையில் எடுத்த புகைப்படத்தை இணைத்து உரிய சான்றிதழ் நகல்களுடன் அந்தந்தப் பகுதி வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரடி யாகவோ, அஞ்சல் மூலமாகவோ மேற்குறிப்பிட்ட நாளுக்குள் மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பணியிடங்கள் அனைத்தும் இன சுழற்சி முறையில் வருவாய் வட்டம் வாரியாகத் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும், இது தொடா்பாக அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களை நேரில் தொடா்பு கொண்டு காலிப் பணியிட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com