திருவள்ளூா் அருகே மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிறுவனம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பஜாரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ப.சுந்தரராசன் தலைமை வகித்தாா். திருவள்ளூா் அருகே மெய்யூரில் 3.3 ஏக்கா் பரப்பளவில் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனம் மூலம் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு நாளைக்கு சுமாா் 8.1 டன் மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து, மெய்யூரில் கொட்டத் திட்டமிட்டுள்ளனா்.
இதனால் சுற்றுப்பகுதி கிராமங்கள் பாதிக்கப்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.