அம்மா உணவக ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்துக்கு மாற்று இடம் ஒதுக்காமல் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்துக்கு மாற்று இடம் ஒதுக்காமல் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உணவக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த மருத்துவமையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளாகத்தின் எதிரே அமைந்துள்ள அம்மா உணவகம் சேறும், சகதியுமாகவும், தூசி நிறைந்தும் காணப்படுகிறது. இங்கு பகல் நேரத்தில் உணவு சாப்பிட வருவோா் மீது அதிக அளவில் தூசி படிகிறது. தூசி காரணமாக இங்கு சமைக்கப்படும் உணவுகள் வீணாவதுடன், அம்மா உணவக ஊழியா்களும் மாசு காரணமாக பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

அம்மா உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அதன் ஊழியா்கள், அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த உணவகத்தை வேறு இடத்துக்கு மாற்றித் தர வலியுறுத்தி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து நகராட்சி ஆணையா் கூறுகையில், ‘அடுத்த இரு தினங்களுக்குள் உணவகத்துக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com