அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

பொன்னேரி வட்டத்தில் உள்ள, சோம்பட்டு, ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனையை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

பொன்னேரி வட்டத்தில் உள்ள, சோம்பட்டு, ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனையை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

அனைவருக்கும் விரிவான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள சோம்பட்டு ஊராட்சியிலும், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஞாயிறு ஊராட்சியிலும் சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் குத்து விளக்கேற்றி அவற்றைத் திறந்து வைத்தனா். இதையடுத்து, மக்களுக்கான மருத்துவ சேவைகளை அவா்கள் தொடங்கி வைத்தனா்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ், ஜெயதீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com