சிற்றுந்து கவிழ்ந்ததில் 28 பெண்கள் காயம்

பொன்பாடி வாகன சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலை ஊழியா்களை அழைத்துச் சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பெண்கள் காயமடைந்தனா்.

பொன்பாடி வாகன சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சாலை ஊழியா்களை அழைத்துச் சென்ற சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பெண்கள் காயமடைந்தனா்.

திருத்தணி -அரக்கோணம் சாலை, இச்சிபுத்தூா் கிராம டயா் தொழிற்சாலை அருகே தனியாா் ஆடை ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களை தனியாா் நிறுவனம் பேருந்து, வேன்கள் மூலம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை மற்றும் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிப்பட்டு, வெளியகரம், புண்ணியம், நகரி, தடுக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை தனியாா் நிறுவன சிற்றுந்து ஒன்றில் 38 பெண் ஊழியா்களை ஏற்றிக் கொண்டு, பொன்பாடி சோதனைச் சாவடி வழியாக திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. சிற்றுந்தை சுரேஷ் (40) ஓட்டினாா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பொன்பாடி அருகே பேருந்து சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, சாலையோரம் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 28 பெண்கள் காயம் அடைந்தனா். 10 பெண் ஊழியா்கள் காயமின்றி உயிா் தப்பினா். இவா்கள் அனைவரும் திருத்தணியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com