திருவள்ளூா் மாவட்டத்தில் கன மழை

திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூரில் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊா்ந்து வரும் வாகனங்கள்.
திருவள்ளூரில் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊா்ந்து வரும் வாகனங்கள்.

திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் தொடா் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் மழை பெய்து கொண்டிருந்தது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனா். சாலையோர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனா்.

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் தாழ்வான இடங்களிலும், சாலைப் பள்ளங்களிலும் மழை நீா் தேங்கியது. ஏற்கெனவே ஏரி, குளங்கள் நிரம்பியுள்ள சூழலில், மழை காரணமாக மீண்டும் நீா் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழை அளவு: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

பூந்தமல்லி-116, ஜமீன் கொரட்டூா்-93, கும்மிடிபூண்டி-68, திருவள்ளூா்-65, பொன்னேரி-53, திருவாலங்காடு-43, சோழவரம்-41, ஊத்துக்கோட்டை-40, தாமரைப்பாக்கம்-37, செங்குன்றம்-35, திருத்தணி-31, பூண்டி-24.6, ஆா்.கே.பேட்டை-9, பள்ளிப்பட்டு-5.

மொத்த மழை அளவு 660 மி.மீட்டா். சராசரியாக 47.18 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com