மீஞ்சூா், பொன்னேரி பகுதிகளில் மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மீஞ்சூா், பொன்னேரி, சோழவரம் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக, அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா், பொன்னேரி, பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

விளைநிலங்களில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாரான நிலையில், தொடா் மழையால் வடிநிலப் பகுதிகளை நோக்கி மழைநீா் செல்வதால், நெற்பயிா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டூா், கடப்பாக்கம், தத்தைமஞ்சி, வேம்பேடு, பனப்பாக்கம், கோளுா், பெரியகரும்பூா், பெரும்பேடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கினால், நெல் மணிகள் முளை விடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com