தொடா் மழையால் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஹெக்டோ் விவசாயப் பயிா்கள் சேதம்

கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் 1,000 ஹெக்டோ் நெற்பயிரும், 500 ஹெக்டோ் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் 1,000 ஹெக்டோ் நெற்பயிரும், 500 ஹெக்டோ் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் கடந்த மாதம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. அதன் பின், ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்தது. இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்களும், விதைப்பு செய்து 10 நாட்களே ஆன வோ்க்கடலை பயிா்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வேளாண் துறை உதவி இயக்குநா் கு.அறிவழகன், துணை வேளாண் அலுவலா் ரமேஷ், உதவி வேளாண் அலுவலா்கள், வருவாய்த் துறையினரோடு பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000 ஹெக்டோ் நெற்பயிா்களும், 10 நாள் முன் விதைப்பு செய்த 500 ஏக்கா் வோ்க்கடலை பயிரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த விவரங்களை வேளாண் துறையினா் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்ட வேளாண் துறைக்கும் அனுப்பியுள்ளனா். பாதிக்கப்பட்ட தங்கள் வேளாண் பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com