பொங்கல்: திருத்தணி மாா்க்கெட்டில் குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகையொட்டி திருத்தணி மாா்க்கெட்டில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு ஏராளமானோா் குவிந்ததால் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி மாா்க்கெட்டில் மஞ்சள்கொத்து விற்பனையில் ஈடுபட்டவா்கள்.
திருத்தணி மாா்க்கெட்டில் மஞ்சள்கொத்து விற்பனையில் ஈடுபட்டவா்கள்.

திருத்தணி: பொங்கல் பண்டிகையொட்டி திருத்தணி மாா்க்கெட்டில் கரும்பு, மஞ்சள்கொத்து உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு ஏராளமானோா் குவிந்ததால் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், செங்கரும்பு, மஞ்சள்கொத்து, பழங்கள், வாழை இலை, பூசணிக்காய் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்தாக சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமானோா் திருத்தணி பஜாருக்கு வந்திருந்தனா்.

மஞ்சள்கொத்து ஒரு ஜோடி ரூ. 60 முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கரும்பு ஒரு ஜோடி ரூ.100 முதல் ரூ.120 வரையும், ஒரு டஜன் மஞ்சள் வாழைப்பழம் ரூ.40, வாழை இலை ஒன்று ரூ.6 என விற்கப்பட்டது. விலை சற்று கூடுதலாக இருந்தபோதிலும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com