அரசு மருத்துவமனை வளாகத்தில் குவியும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால் அங்கு வரும்
திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் குவிந்துள்ள குப்பைக் குவியல்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் குவிந்துள்ள குப்பைக் குவியல்.

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வகையான மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால் அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்றால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளதால், இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன அறுவை சிகிச்சைக்கூடம், சி.டி.ஸ்கேன் மையம், தாய்-சேய் நலம், இருதயப் பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, டயாலிசிஸ் மையம், எலும்பு சிகிச்சைப் பிரிவு மற்றும் சிறப்பு குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. அத்துடன், தற்போது, புதிதாக அமைக்கப்பட்ட நவீன கட்டடம் மற்றும் அறுவை சிகிச்சைக்கூட வசதியுடன் பிரசவம் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 600 முதல் 800 போ் வரை வெளிநோயாளிகளாகவும், 300-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கும் இடையே உள்ள பகுதியில் மகப்பேறு கழிவுகள், அறுவை சிகிச்சை கழிவுகள் உள்ளிட்டவற்றை நெகிழிப் பைகளில் அடைத்து குவித்து வருகின்றனா். இதனால், அப்பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள் அதிகளவில் வந்து உட்கொள்ளும் சூழ்நிலை உள்ளது. அத்துடன், அப்பகுதியில் யாரும் நடமாட முடியாத அளவுக்கு துா்நாற்றம் வீசுவதுடன், அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. அதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைக் கழிவுகளை நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com