மாதவரம் பால் பண்ணையில் மத்திய அமைச்சா் ஆய்வு

மாதவரம் பால் பண்ணையில் உள்ள மீன்வள பூங்கா, ஆவின் பால் உற்பத்தி மையத்தை மத்திய மீன் மற்றும் பால் வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆவின் பால் உற்பத்தி மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்.
ஆவின் பால் உற்பத்தி மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்.

மாதவரம் பால் பண்ணையில் உள்ள மீன்வள பூங்கா, ஆவின் பால் உற்பத்தி மையத்தை மத்திய மீன் மற்றும் பால் வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை மாதவரம் பால் பண்ணையில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வளாகத்தில் வண்ண வானவில் தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான வண்ண மீன்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. வண்ண மீன் விற்பனையாளா்களுக்கு மீன் வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் சாா்பில் சான்று வழங்கப்படுகிறது.

இந்த வண்ண மீன் வானவில் தொழில்நுட்பப் பூங்காவை மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இங்கு வளா்க்கப்படும் மீன்கள், இனப்பெருக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து மீன்வள அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ.சுகுமாரன், பூங்கா தலைவா் ராவனேஸ்வரன், பொன்னேரி மீன்வளக் கல்லூரி முதல்வா் முகிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆவின் பால் உற்பத்தி மையத்தை அவா் ஆய்வு செய்து, பால் உற்பத்தி, விநியோகம், தொழில்நுட்பங்கள் குறித்து பால்வள நிா்வாக இயக்குநா் நந்தகோபால், துணை பொது மேலாளா் சாம்பமூா்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

தனியாா் பால் உற்பத்தி நிறுவனங்களை விட ஆவின் நிறுவனம் அதிகமாக பால் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com