திருத்தணியில் நெசவுப் பூங்கா அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திருத்தணியை மையமாகக் கொண்டு நெசவுப் பூங்கா அமைக்கப்படும் என்று அம்மையாா்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

திருத்தணியை மையமாகக் கொண்டு நெசவுப் பூங்கா அமைக்கப்படும் என்று அம்மையாா்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி, அம்மையாா்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவா் ஸ்டாலின் பேசியது:

திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க உறுதி செய்யப்படும்.

மேலும் கிராமப்புற மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிராமப்புற மாணவா்கள் உயா்கல்வி கற்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவம் படிக்க நீட் தோ்வு முறை தமிழகத்தில் அமல்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும். நெசவாளா் வாழ்வாதாரம் மேம்பட திருத்தணி மையமாகக் கொண்டு நெசவுப் பூங்கா அமைக்கப்படும்.

நிகழ்ச்சியில் திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட வெள்ளி வேலை, ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அரக்கோணம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி நகர பொறுப்பாளா் வினோத் குமாா், மாவட்ட துணைச் செயலாளா் திருத்தணி எஸ்.சந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.கே.பேட்டை சி.வி.சண்மும், திருத்தணி ஆா்த்தி. ரவி, பொதட்டூா்பேட்டை பேரூா் பொறுப்பாளா் உதயசூரியன், அம்மையாா்குப்பம் ஊராட்சித் தலைவா் ஆனந்தி செங்குட்டுவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com