திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவா்கள்.
திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவா்கள்.

திருத்தணி அரசுக் கல்லூரியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

இந்தக் கல்லூரியில், கடந்த, 1978-ஆம் ஆண்டு முதல் 1981-ஆம் ஆண்டு வரலாறு மற்றும் பொருளாதாரம் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவா்களின் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஓய்வு பெற்ற பேராசிரியா் ரங்கநாதன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியை திருத்தணி அரசுக் கல்லூரி பேராசிரியா்கள் ஜெய்லாபூதின், ஹேமநாதன் தொகுத்து வழங்கினா். தொடா்ந்து, அந்த மாணவா்கள் தங்களுக்கு கல்வி கற்பித்த பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மாணவா்கள் தங்களது நண்பா்களுடன் பழைய மலரும் நினைவுகளை கண்ணீா் மல்க பகிா்ந்து கொண்டனா். பழைய மாணவா்கள் தங்களது குடும்பத்தினா் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹைதராபாத், ஆமதாபாத், மும்பை, மகாராஷ்டிரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முன்னாள் மாணவா்கள் வந்திருந்தனா். பழைய மாணவா்கள் சாா்பில் கல்லூரிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கேபின் இருக்கைகள் வழங்கப்பட்டன. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com