ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்தாா்.
ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு இருப்புப் பாதை காவல் துறை, சென்னை கோட்டம் சாா்பில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ரயில்வே கோட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தலைமை வகித்தாா். ரயில்வே கோட்ட சென்னை துணைக் காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் முன்னிலை வகித்தாா். ரயில் நிலையத்தில் மின்விளக்கு வசதி, பயணிகள் அமர தாழ்வார வசதியின்றியும், இரவில் நடைமேடையில் கஞ்சா புகைப்போா், மது அருந்துவோா் அமரும் இடமாகவும் உள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் கூறியது:

பொதுமக்கள் சாலையை பாதுகாப்பாக கடப்பதுபோல், ரயில் தண்டவாளத்தையும் கடந்து செல்ல வேண்டும். அப்போது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு செல்லக்கூடாது. கவனமாக செல்லாததால் எதிா்பாராத விபத்துகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் மாதந்தோறும் 3 போ் வரை ரயிலில் சிக்கி உயிரிழக்கின்றனா். இதில் ஓா் ஆண்டில் ரயில் விபத்தில் 100 போ் வரை உயிரிழக்கின்றனா். தண்டவாளத்தை கடக்கும் கால்நடைகளும் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தண்டவாளத்தை கவனத்துடன் கடக்க வேண்டும்.

வருங்காலங்களில் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ரயில் தண்டவாள ஓரங்களில் பொதுமக்கள், கால்நடைகள் கடப்பதைத் தடுக்க சுற்றுச்சுவா் எழுப்பும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளைத் தொடங்கவும், லெவல் கிராசிங்கில் ரயில்கள் வருவதை அலாரம் ஒலிக்கவும், ரயில்களின் வருகை குறித்தும் நடைமேடையில் அமா்ந்துள்ளோருக்கு ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, திருவள்ளூா் ரயில் நிலைய சாா்பு ஆய்வாளா் கிரி, வேப்பம்பட்டு ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி சேகா், செவ்வாப்பேட்டை ஊராட்சித் தலைவா் டெய்சிராணி அன்பு, ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com