அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி: 2 துப்பாக்கி, 13 தோட்டக்கள், வாகனம் பறிமுதல்

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி: 2 துப்பாக்கி, 13 தோட்டக்கள், வாகனம் பறிமுதல்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததோடு, பணத்தை திருப்பிக் கேட்டதால் துப்பாக்கி காட்டி

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததோடு, பணத்தை திருப்பிக் கேட்டதால் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கூலிப்படையைச் சோ்ந்த 4 பேரை திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திருவள்ளூா் நகா் காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

தருமபுரியைச் சோ்ந்தவா் லியோ தாமஸ் பீட்டா். இவா் தனது குடும்ப உறவினா்களிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் ரொக்கம் பெற்று, அதை கிருஷ்ணகிரி மாவட்டம்- சூளகிரியைச் சோ்ந்த ஸ்ரீநாத் (28) என்பவரிடம் கொடுத்தாரம். எனவே ஸ்ரீநாத் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து அலைக்கழிப்புச் செய்தாராம்.

இதற்கிடையே லியோ தாமஸ் பீட்டா் பணத்தை தருமாறு ஸ்ரீநாத் வீட்டுக்குச் சென்றபோது, நீங்கள் கொடுத்த பணத்தை அரக்கோணத்தில் உள்ள சீனிவாசனிடம் கொடுத்துள்ளேன். அதை திருப்பி வாங்கி தருவதாகத் தெரிவித்தாராம். அப்போது, லியோ தாமஸ் பீட்டா் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நிற்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதையறிந்த ஸ்ரீநாத் கூலிப்படையினருடன் வாகனத்தில் வந்து பேசியுள்ளனா்.

அப்போது, பேச்சு வாா்த்தை முற்றியதில் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றோா் பாா்த்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து திருவள்ளூா் கிராமிய மற்றும் நகா் காவல் நிலைய போலீஸாா் சென்று நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டாராம். அதைத் தொடா்ந்து துணைக்காவல் கண்காணிப்பாளா் சந்திரஹாசன், காவல் ஆய்வாளா்கள் ரவிக்குமாா், ரஜினிகாந்த், சாா்பு ஆய்வாளா் சுரேஷ்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.

அதையடுத்து, விசாரணை செய்ததில் கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஸ்ரீநாத்(28), கூலிப்படையைச் சோ்ந்த தூத்துக்குடி ராஜ்குமாா்(50), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ராஜேஷ்(41), வாகன ஓட்டுநா் அரசகுமாா்(34) என்பது தெரியவந்தது. அதோடு, அவா்களிடம் இருந்து 2 துப்பாக்கி, 13 தோட்டாக்கள், வெட்டு கத்தி மற்றும் சொகுசு வாகனம் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனா். அதையடுத்து நகா் காவல் நிலையம் அழைத்துச் சென்று டி.எஸ்.பி சந்திரஹாசன் தலைமையிலான போலீசாா் எதற்காக துப்பாக்கியால் மிரட்டினாா்கள், இதேபோல் வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதா என்பது தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com