நிமோனியா, மூளைக்காய்ச்சல் நோய்களிலிருந்து பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்க தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து பச்சிளம்குழந்தைகளைப் பாதுகாக்கத் தடுப்பூசி போடும் திட்டத்தை மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து பச்சிளம்குழந்தைகளைப் பாதுகாக்கத் தடுப்பூசி போடும் திட்டத்தை மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட பூந்தமல்லி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், நியுமோகோக்கல் கான்ஜூகேட் என்ற புதிய தடுப்பூசி பச்சிளம்குழந்தைகளுக்கு போடும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பச்சிளம்குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் நியுமோகோக்கல் கான்ஜூகேட் புதிய தடுப்பூசி போடும் திட்டம் பூந்தமல்லி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில அளவில் முதன் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் 21 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், மூன்றரை மாதம், ஒன்பது மாதம் என 3 முறை தடுப்பூசி போடப்பட வேண்டும். இதில் முதல் தவணை முதல் தடுப்பூசி போடப்பட்ட குழந்தையின் அடுத்தது எப்போது என பெற்றோருக்கும் நினைவுபடுத்தப்படும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.4 ஆயிரம் என்ற அளவில் குழந்தைகளுக்கு 3 முறை போட்டுக்கொள்வதன் மூலம் தலா ரூ.12 ஆயிரம் வரையில் செலவிடுகிறது.

தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 9.23 லட்சம் குழந்தைகள் பயன்பெற உள்ளனா். தடுப்பூசி போடப்படாத நிலையில் இந்தியா அளவில் நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 12 லட்சமாக உள்ளது. அதனால் இந்தப் பாதிப்பிலிருந்து இறப்பு விகிதத்தை குறைக்கத் தடுப்பூசி போடும் பணி முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா் சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில், பொது சுகாதாரம்- நோய்த் தடுப்பு துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மக்களவை உறுப்பினா் கே.ஜெயகுமாா், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநா் செல்வநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com