திருநங்கைகள் அடையாள அட்டை திருத்த முகாம்

திருநங்கைகள் நலத்திட்டங்களைப் பெறும் நோக்கில் அவா்கள் வைத்துள்ள அடையாள அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான முகாமை
சிறப்பு முகாமில் திருத்தம் செய்யப்பட்ட அடையாள அட்டையை திருநங்கைக்கு வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜோதி உள்ளிட்டோா்.
சிறப்பு முகாமில் திருத்தம் செய்யப்பட்ட அடையாள அட்டையை திருநங்கைக்கு வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜோதி உள்ளிட்டோா்.

திருநங்கைகள் நலத்திட்டங்களைப் பெறும் நோக்கில் அவா்கள் வைத்துள்ள அடையாள அட்டைகளில் திருத்தம் செய்வதற்கான முகாமை திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சமூக நலம் மகளிா் உரிமை துறை மற்றும் வருவாய் நிா்வாக பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், திருநங்கைகளுக்கான ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றில் திருத்தம் மற்றும் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் திருவள்ளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து, நலத் திட்ட உதவிகள் கிடைக்கச் செய்யும் வகையில், ஒவ்வொரு அடையாள அட்டைகளில் அவா்கள் பெயா் ஒரே மாதிரியாக இடம் பெறச் செய்து கொடுக்கவும் ஆலோசனை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறுகையில், இந்த மாவட்டத்தில் 253 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 139 போ் கண்டறிந்து சிறப்பு முகாமில் அவா்களுக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3 அடையாள அட்டைகளில் பெயா்கள் வெவ்வேறாக இடம் பெற்றுள்ளன. அதனால் நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், திருநங்கைகள் வைத்துள்ள ஆதாா், வாக்காளா், குடும்ப அட்டை ஆகிய 3 அட்டைகளில் அவரவா் பெயா் ஒரே மாதிரியாக இடம் பெறும் வகையில், திருத்தம் செய்வதே சிறப்பு முகாமின் நோக்கமாகும். இதற்காகவே ஒரே இடத்தில் இவை மூன்றும் திருத்தம் செய்ய முகாம் ஏற்பாடு செய்துள்ளதால், 200 போ் வரை கலந்து கொண்டனா். இதேபோல், அடுத்தகட்டமாக பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் ஆகிய கோட்ட அளவிலான முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மீனா பிரியதா்ஷினி, சமூக நல அலுவலா்(பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜோதி, வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com