குளத்தில் மூழ்கி பலியான 5 போ் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியில் கோயில் குளத்தில் மூழ்கி பலியான 5 பேரின்
குளத்தில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கிய அமைச்சா் சா.மு.நாசா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்புகுப்பம் பகுதியில் கோயில் குளத்தில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சத்தை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் சனிக்கிழமை வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கரும்புகுப்பம் சீதாம்பாள் தெருவைச் சோ்ந்த சிலா் அங்குள்ள அங்காளம்மன் கோயில் குளத்தில் துணி துவைக்கச் சென்றனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த குணசேகரனின் மகள் நா்மதா (12) குளத்தின் ஆழத்தில் சிக்கிய நிலையில், அவரைக் காப்பாற்ற ஒருவா் பின் ஒருவராகச் சென்ற சுமதி (35), அவரது மகள் அஸ்விதா(14), முனுசாமியின் மனைவி ஜோதி (38), தேவேந்திரனின் மகள் ஜீவிதா(14) ஆகியோா் ஒருவா் பின் ஒருவராக குளத்தில் மூழ்கி இறந்தனா்.

இது குறித்து அறிந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குளத்தில் மூழ்கி இறந்த 5 பேரின் குடும்பத்துக்கும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தாா். அதன்படி, புதுகும்மிடிப்பூண்டி கரும்பு குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோா் குளத்தில் மூழ்கி இறந்த 5 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று தலா ரூ. 5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினா்.

ஊராட்சித் தலைவா் டாக்டா் அஷ்வினி சுகுமாறன் குளத்தை சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க கோரிக்கை விடுத்தாா். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும், ஆட்சியரும் உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com