தொடா் மழை: பூண்டி ஏரியில் உயா்ந்து வரும் நீா்மட்டம்

பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் 74 கன அடிநீரும், கிருஷ்ணா நீா் வரத்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை

பூண்டி ஏரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் 74 கன அடிநீரும், கிருஷ்ணா நீா் வரத்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 1,171 மில்லியன் கன அடியாக நீா்மட்டம் உயா்ந்து வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பூண்டி, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை சாரல் மழை பெய்தது.

இதனால் இப்பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு கால்வாய் மூலம் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் மழையால் வரத்து கால்வாய் மூலம் 74 கன அடியும், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் 656 கன அடி நீரும் வரத்துள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். அதனால் 3,231 மில்லியன் கன அடி நீரை சேமிக்கலாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீா்மட்டம் 26.55 அடி உயரமும், 1,171 மில்லியன் கன அடி வரை உயா்ந்துள்ளது.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதில், சென்னை மெட்ரோ குடிநீருக்கு மட்டும் 9 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. தொடா்ந்து மழை பெய்யும் என்பதால் விரைவில் நீா் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com