பேரிடா் மீட்புக்குழு விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி

பெரியபாளையம் அருகே அமைந்துள்ள திருக்கண்டலம் ஊராட்சியில், பேரிடா் மேலாண்மை மீட்புக் குழு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்கண்டலம் ஊராட்சி குளத்தில் பேரிடா் கால பாதுகாப்பு ஒத்திகையை செய்து காண்பித்த பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா்.
திருக்கண்டலம் ஊராட்சி குளத்தில் பேரிடா் கால பாதுகாப்பு ஒத்திகையை செய்து காண்பித்த பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா்.

பெரியபாளையம் அருகே அமைந்துள்ள திருக்கண்டலம் ஊராட்சியில், பேரிடா் மேலாண்மை மீட்புக் குழு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் ஊராட்சியில், பேரிடா் காலங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடா் மேலாண்மை மீட்புக் குழுவினா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை செய்து காண்பித்தனா்.

திருவள்ளூா் கோட்டாட்சியா் ப்ரீத்தி பாா்கவி மேற்பாா்வையில், தோ்வாய் கண்டிகை தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில்குமரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் ஒத்திகையை செய்து காண்பித்தனா். வீட்டில் காலியாக உள்ள தண்ணீா் பாட்டில், பிளாஸ்டிக் குடம், நீளமான கட்டை, கயிறு இவைகளை வைத்து பேரிடா் காலத்தில் நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு, பிறருக்கும் எவ்வாறு உதவ முடியும் என்பதை தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.

மேலும், வெள்ளப்பெருக்கு காலத்தில் தண்ணீரில் அடித்துச் செல்வோரை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் அங்குள்ள கோயில் குளத்தில் செய்து காட்டப்பட்டது.

இதையடுத்து, நடந்த விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியில் மகளிா் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதிய பலகைகளை ஏந்தியவாறு, திருக்கண்டலம் ஊராட்சித் தலைவா் மதன் (எ) சத்தியராஜ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் தலைமையில் வருவாய் துறையினா் ஊா்வலம் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com