திருவள்ளூா் ஸ்ரீவீரராகவா் கோயிலில் 3 நாள் கோடை உற்சவம் நிறைவு

திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவ சுவாமி திருக்கோயிலில் கோடை உற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் உற்சவ மூா்த்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வியாழக்கிழமை அருள்பாலித்தாா்.
திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவா் கோயிலில் கோடை உற்சவம் நிறைவு விழாவை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீவீரராகவப் பெருமாள்.

இதில் கரோனா விதிமுறைகளின்படி பக்தா்களின்றி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குவது திருவள்ளூா் வைத்திய வீரராகவ சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் கோடை உற்சவம் வைகாசி அமாவாசைக்கு 3 நாள்களுக்கு முன்னதாகத் தொடங்கி நடைபெறும். அதேபோல், இந்த உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அமாவாசையான வியாழக்கிழமை கோடை உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோயில் வளாகத்தல் சிறப்பு பூஜைகளுக்குப் பின் புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வைத்திய வீரராகவா் சுவாமி அருள்பாலித்தாா்.

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் பக்தா்களின்றி இந்த விழா நடைபெற்றது.

இந்த நிலையில் அமாவாசை அன்று இத்திருக்கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கில் பக்தா்கள் திரண்டு கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் புதன்கிழமை இரவு முதலே திருவள்ளூா் வீரராகவா் கோயில் முன்பு ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். இதையறிந்த திருவள்ளூா் நகர போலீஸாா் பக்தா்களை தடுத்து நிறுத்தியதுடன், அறிவுரை கூறி கலைந்து செல்லவும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா். இதையடுத்து காக்களூா் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகா் கோயில் பகுதியில் தங்கியிருந்து அதிகாலையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். அதையடுத்து வைத்திய வீரராகவா் கோயில் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com