முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
கனரக வாகன ஓட்டுநா்களுக்கு நிவாரண உதவிகள்
By DIN | Published On : 12th June 2021 07:59 AM | Last Updated : 12th June 2021 07:59 AM | அ+அ அ- |

மாதவரத்தில் கனரக வாகன ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து உதவி ஆணையா் மலைச்சாமி வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.
சென்னை மாதவரம் சி.எம்.டி.ஏ. கனரக வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. இங்கு ஏராளமான வெளிமாநில சரக்குகள் ஏற்றும் மற்றும் இறக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஊரடங்கு காலம் என்பதால் வெளிமாநில கனரக வாகன ஓட்டுநா்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு இங்கேயே தங்கும் நிலை உள்ளது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாதவரம் போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் மலைச்சாமி நிவாரண உதவிகளை வழங்கினாா். இதில் கனரக ஓட்டுநா்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. மேலும் முகக் கவசம், சானிடைசா், கையுறை உள்ளிட்டவையும் ஓட்டுநா்களுக்கு வழங்கப்பட்டன.