வாகனச் சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

தோ்தல் படைக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் 11 நபா்களிடம் இருந்து 3.29 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.29 லட்சம் பணத்தை ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
திருத்தணியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3.29 லட்சம் பணத்தை ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

தோ்தல் படைக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் 11 நபா்களிடம் இருந்து 3.29 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருத்தணி பகுதியில் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருத்தணி-அரக்கோணம் சாலையில் திருத்தணி தோட்டக்கலைத் துறை துணை அலுவலா் அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஒரு வாகனம் காஞ்சிபுரம் நோக்கி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் இருந்த 11 நபா்களிடமிருந்து ரூ. 3 லட்சத்து 29 ஆயிரத்து 500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பணம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பதியைச் சோ்ந்த பாலாஜி என்பவா் காஞ்சிபுரம் சென்று பட்டுப்புடவை வாங்குவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. எனினும் உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தோ்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com