கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி

கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் அறிமுக விழா ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் அறிமுக விழா.
கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் அறிமுக விழா.

கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் அறிமுக விழா ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், புதுக்கோட்டையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அருகே கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுக விழா நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் பாமக வேட்பாளர் பிரகாஷை அறிமுகம் செய்துவைத்தார். 
விழாவில் வேட்பாளர், தேர்தல் வாக்குறுதியாக ஊத்துக்கோட்டை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நன்கு படித்தும் குடும்ப வறுமையில் வாடிய 5 மாணவர்களை தேர்ந்தெடுத்தால் அவர்களின் மேற்படிப்பிற்கு வேண்டிய மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி அளித்தார். 
ஊர்வலமாக கூட்டணிக் கட்சிகள் புடை சூழ மேள தாளங்களுடன் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். 
மேலும் சீதஞ்செரி பகுதியில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு அரசு மகளிர் கல்லூரி கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் ஊத்துக்கோட்டை பேரூர் மன்ற தலைவர் சேக் தாவூத் மற்றும் மாவட்ட இளைஞரணி ராகேஷ் .பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாந்த் உட்பட ஏராளமானோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com