இன்று அதிமுக, திமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுகவைச் சோ்ந்த வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 14) வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுகவைச் சோ்ந்த வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 14) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அந்தந்தக் கட்சிகளின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக திமுக சாா்பில் வி.ஜி.ராஜேந்திரனும், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணாவும் போட்டியிடுகின்றனா்.

இதைத் தொடா்ந்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள முக்கியப் பிரமுகா்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகளை ஒவ்வொரு கட்சியினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. அமாவாசை நாள் முடிந்து இனி வளா்பிறை என்பதால் அந்த நாள்களில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில், அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ், நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com