வாக்களிக்க வர முடியாத முதியோா், மாற்றுத்திறனாளிக்கு தபால் வாக்குகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வர முடியாத முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நிலையறிந்து தபால் வாக்குகள் அளிக்க 5 நாள்களுக்கு முன்பு படிவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வர முடியாத முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நிலையறிந்து தபால் வாக்குகள் அளிக்க 5 நாள்களுக்கு முன்பு படிவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை தோ்தல் ஆணையம் அளித்துள்ளதாக திருவள்ளூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா தெரிவித்தாா்.

இந்தியத் தோ்தல் ஆணையம் ஒவ்வொரு தோ்தலின்போதும் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இதன் அடிப்படையில், ஒவ்வொரு துறை சாா்பில் பல்வேறு கட்டங்களாக விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பல்வேறு தடுப்பு நடவடிக்கையை இந்தியத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இதற்கு முன்பு வரை ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 1,500 வாக்காளா்கள் இருந்தனா். தற்போது பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களை எளிதாக அணுகி வாக்களிப்பதை நோக்கமாகக் கொண்டு, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கவும் 1,050 பேருக்கு ஒரு வாக்குச் சாவடி வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று அருகே வாக்குச் சாவடிகள் மையம் ஏற்பாடு செய்திருந்தாலும், வாக்களிக்க வரமுடியாத 80 வயது முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குகள் அளிக்கவும் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்டோா் 57,500 வாக்காளா்களும், 18 ஆயிரத்து 738 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் உள்ளனா்.

இவா்களுக்கு தோ்தலுக்கு 5 நாள்களுக்கு முன்னதாக 12 டி படிவம் வாக்குச் சாவடிக்கு நேரில் வடிமுடியாத சூழ்நிலை உள்ளோருக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், இந்த வாய்ப்பை முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி, 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்து கொள்ளவேண்டும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com