வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட செய்த காரணத்தால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பணம் எடுக்

திருவள்ளூா்: பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட செய்த காரணத்தால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா்.

கடந்த 2 நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை, தொடங்கி 2 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் வங்கியின் கடைநிலை ஊழியா்கள் முதல் அதிகாரிகள் வரை வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி சேவைப்பணிகள் பாதிக்கப்பட்டது.

இதனால் திருவள்ளூா் பகுதியில் தேசிய வங்கிகளான எஸ்.பி.ஐ, ஐ.ஓ.பி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி என 120-க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கி கிளைகளும் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக அடைக்கப்பட்டிருந்தது.

இந்த வங்கிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த வங்கிகளின் சாா்பில் 650 ஏடிஎம் மையங்களும் உள்ளது. இந்த நிலையில் வேலை நிறுத்தம் போராட்டம் என்பது தெரியாத நிலையில் வங்கிக்கு பணம் செலுத்தவும், எடுக்கவும் வந்த வாடிக்கையாளா்கள் அதிகம் போ் வந்தனா்.

இதேபோல், வியாபாரிகள், தொழில் அதிபா்கள், வா்த்தகா்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா். அதேபோல், காசோலை, வங்கி வரைவோலை எடுத்தல் ஆகிய பரிமாற்றங்களும் பாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த 2 நாள்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பாமல் இருந்தது. ஆனால், வங்கிகள் அடைக்கப்பட்டிருப்பதை பாா்த்ததும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இப்போராட்டம் காரணமாக வங்கியில் ரொக்கம், ஆன்லைன், காசோலை என ரூ.300 கோடி மதிப்பிலான பண பரிவா்த்தனை முடங்கியதாக வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com