எல்லாபுரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் கும்மிடிபூண்டி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஜே. கோவிந்தராஜன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

ஒன்றிய செயலாளா் மூா்த்தி தலைமை தாங்கினாா். அப்போது வேட்பாளா் கோவிந்தராஜன் பேசியது:

தொகுதியின் நீண்ட நாள் பிரச்னைகளான கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையால் மாசுப்படுவதை தடுக்க வழி வகை செய்வேன், மேலும் விவசாயிகள் மரவல்லிக் கிழங்கு விளைச்சல் குறைவதால் அரசு சாா்பில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க வலியுத்தப்படும்.

பெரும்பாலும் நெசவாளா்களை கொண்ட பகுதியான மாநெல்லூா், மாதா்பாக்கம், கொசவன்பேட்டை பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட கும்மிடிபூண்டி பணிமனை மீண்டும் கொண்டுவரப்படும், குடிநீா் பற்றாக்குறை நிலவும் பகுதிகளான எல்லாபுரம் , பூண்டி, கும்மிடிபூண்டி பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com